×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்... தமிழகத்தை சேர்ந்த IT ஊழியருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை..!!

BAD boys..

Advertisement

விமானத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சக பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு  ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்றவர் பிரபு ராமமூர்த்தி.  தமிழகத்தை சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப துறையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிரபு கடந்த ஜனவரி மாதம், 3 ஆம் தேதி தனது மனைவியுடன் விகாஸ் நகரில் இருந்து டெட்ராய்டு நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். இரவு நேர பயணம் என்பதால் விமானத்தில் இருந்த பலரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரபு தனக்கு அருகில் இருந்த சக பெண் பயணிடம் அத்து மீறலில் ஈடுப்பட்டுள்ளார்.

நள்ளிரவு நேரத்தை நெருங்கும்போது பிரபு ராமமூர்த்தி அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. தூக்க கலத்தில் கண் விழித்து பார்த்த போது அந்த பெண்ணின் ஆடைகள் கழற்றப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் அந்த பெண்  கூச்சலிட்டார். விமானத்தில் உள்ளவர்கள் வந்து விசாரித்ததில் பிரபு தான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக விமான ஊழியர்களை அவர் உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி சரியான முறையில் உடை அணியாமல் இருந்ததையும், அந்த பெண்ணின் இருக்கை பகுதியில் இருந்ததையும் உறுதி செய்தனர்.

இதையடுத்து பிரபு ராமமூர்த்திக்கான தண்டனை விவரத்தை நீதிபதி டெரான்ஸ் பெர்க்  தெரிவித்தார். அதில் “  ஓடும் விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலை அளித்த பிரபு ராமமூர்த்திக்கு 9 வருடம் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் விமானத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்” என நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “விமானத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். தூங்குபவர்களிடம் இது போன்ற மோசமான பழக்கங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இதுப்போன்ற பிரச்சனைகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த புகாரை தைரியமாக வெளியே சொல்லி, புகார் கொடுத்த பெண்ணை பாராட்டுகிறோம்” என்று கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபுக்கு அமெரிக்க நீதிமன்றம் அளித்துள்ள அதிரடி தண்டனை சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பிரபு ராமமூர்த்தி #tamil news #tamil nadu #America
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story