×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குழந்தையின் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை.!

கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குழந்தையின் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை.!

Advertisement

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்துள்ள ஓட்டேரியில் இருந்து பாலமதி செல்லும் சாலையோர முட்புதரில் கடைகளில் வைக்கப்படும் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் வீசப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கண்ணாடி பாட்டிலை உடைத்துப் பார்த்தபோது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கருகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து குழந்தையின் சடலத்தை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெற்றோர் குழந்தையை கொன்று பாட்டில் அடைத்து வீசி இருக்கலாம் எனவும், ஏதேனும் சதி திட்டமா என்ற பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #Pagayam #Baby dead body #Ooteri road #Glass bottle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story