மாணவர்களுக்கு பாலியல் தொல்லை... ஆட்டோ டிரைவரை போட்டு தள்ளிய சிறுவர்கள்.!! 5 பேர் கைது.!!
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை... ஆட்டோ டிரைவரை போட்டு தள்ளிய சிறுவர்கள்.!! 5 பேர் கைது.!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இளைஞர் மற்றும் 4 சிறுவர்களை கைது செய்துள்ள காவல்துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான தங்கமலை என்பவர் பள்ளி வளாகத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். மேலும் அவரது உடலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதற்கான காயங்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் இறந்த தங்கமலையின் செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்து வந்தனர்.
காவல்துறை விசாரணையின் அடிப்படையில் தெப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் (25), செல்வ முருகன் (16), அறிவழகன் (15), அபிஷேக்குமார் (14) மற்றும் விமல்(12) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் தங்கமலையை அடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. ஆட்டோ டிரைவரான தங்கமலை அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துருக்கிறது. இது தொடர்பாக 4 சிறுவர்களும் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.. கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்.!! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கோர முடிவு.!!
பிறகு அஜித்குமார் மற்றும் 4 சிறுவர்களும் ஆட்டோ டிரைவர் தங்கமலையை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஆட்டோ டிரைவர் தங்கமலை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கிறார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அஜித் குமார் மற்றும் சிறுவர்கள் அங்கிருந்த தென்னை மட்டை மற்றும் கம்புகளை கொண்டு தங்கமலையை சராமாரியாக தாக்கியிருக்கின்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தங்கமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை விசாரணையை தொடர்ந்து அஜித்குமார் மற்றும் 4 சிறுவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!