சசிகலா வெளியே வருவது உறுதி! அவர் வெளியே வந்ததும் என்ன நடக்கும்? ஜோதிடர் பாலாஜியின் பரபரப்பு பதில்!
astrologer balaji talk about sasikala

கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜோதிடர் பாலாஜி 2019 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் கேன் வில்லியம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்றும் கணித்திருந்தார். இந்தநிலையில் அவர் கூறியிருந்த படியே அனைத்தும் நடந்தது.
மற்றொரு நிகழ்ச்சியில் ஜோதிடர் பாலாஜி இந்திய அணியின் தோனி ஓய்வு பெறுவதை குறித்து அறிவித்தார். மேலும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த பாலாஜி ஹாஸன், உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும் என்றும், மேலும் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் பிரபல தொலைக்காட்சியில், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு உள்ளதா என ஜோதிடர் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிடர், எனது கணிப்பின்படி இந்தவருட டிசம்பரில் இருந்து 2020 மார்ச் மாதத்திற்குள் சசிகலா வெளியேவருவார் என கூறினார்.
மேலும், அதிமுகவை இணைத்து, சிலரை நீக்கிவிட்டு கட்சியை தொடர்வார் எனவும், அதில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பு வகிப்பார் எனவும் ஜோதிடர் பாலாஜி கூறினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மகிழ்ச்சியில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.