×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

28 வயது இளைஞருக்கு பிறப்புறுப்பில் தொற்று! அறுவை சிகிச்சையின் போது அலட்சியத்தால் மருத்துவர்கள் செய்த அதிர்ச்சி செயல்! கதறும் வாலிபர்...

28 வயது இளைஞருக்கு பிறப்புறுப்பில் தொற்று! அறுவை சிகிச்சையின் போது அலட்சியத்தால் மருத்துவர்கள் செய்த அதிர்ச்சி செயல்! கதறும் வாலிபர்...

Advertisement

அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியான ஒரு மருத்துவ சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அதிகுர் ரஹ்மான் என்பவர், பிறப்புறுப்பு தொற்றுக்கான சிகிச்சை பெற சென்ற இடத்தில், அவருடைய அனுமதியின்றி அவரது பிறப்புறுப்பே அகற்றப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

அதிகுர் ரஹ்மான், ஜூன் 19ஆம் தேதி, தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக சில்சாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக கூறுகிறார். அங்கு அவருக்கு பயாப்ஸி பரிசோதனை செய்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அனுமதி இல்லாமல் பிறப்புறுப்பு அகற்றிய மருத்துவர்கள்

பரிசோதனைக்குப் பின், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரஹ்மான், சிகிச்சைக்குப் பிறகு விழித்தபோது தான் அவரது பிறப்புறுப்பு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொந்த மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்த 50 வயது தாய்! அதுவும் 30 வயது வித்தியாசத்தில்! அடுத்து மகனுக்கு சொன்ன குட் நியூஸ்! சீனாவில் நடந்த வினோதம்!

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க முயன்ற ரஹ்மான், மருத்துவர்களிடம் திருப்திகரமான பதிலை பெற முடியவில்லை என்றும், தன்னை சந்திக்க மருத்துவர்கள் தவிர்த்து வந்ததாகவும் கூறுகிறார்.

முதல்வரிடம் நேரடி மனு

தனது வாழ்க்கை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக உணர்ந்த ரஹ்மான், அசாம் முதல்வர் ஹிமந்தா விஷ்வா ஷர்மாவிடம் நேரடியாக மனுவொன்றை வழங்கியுள்ளார். அதில், அறுவை சிகிச்சை செய்த முறையைப் பற்றிய நீதி வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. மருத்துவ முறையில் விழிப்புணர்வு மற்றும் நியாயம் கிடைக்க வேண்டியது  குறித்தும் கேள்வி எலும்புகிறது.

 

இதையும் படிங்க: பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா! 15 வயது சிறுமியை ஓடும் காரில் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்! மறுநாள் சிறுமிக்கு வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அசாம் மருத்துவ முறை #Assam hospital issue #private part surgery #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story