×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவரை கொன்று புதைத்த மனைவி.. 11 வருடம் கழித்து வெளியான பகீர் உண்மை.. பரபரப்பு தகவல்.!

கணவரை கொன்று புதைத்த மனைவி.. 11 வருடம் கழித்து வெளியான பகீர் உண்மை.. பரபரப்பு தகவல்.!

Advertisement

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி, 11 வருடம் கழித்து காவல் துறையினரின் விசாரணையில் கைதாகியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு லட்சுமி என்ற 44 வயது மகளும், குணசேகரன் என்ற 42 வயது மகனும் உள்ளனர். நாகராஜனின் மகன், மகள் ஆகியோர் திருமணம் முடிந்து தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2007 ஆம் வருடம் செந்தாமரை (வயது 40) என்பவரின் கொலை வழக்கில், குணசேகரன் மற்றும் அவரின் உறவினர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த கொலை வழக்கின் தீர்ப்பு கடந்த 2011 ஆம் வருடம் ஜனவரி 21 ஆம் தேதி வாசிக்கப்பட்டது. தீர்ப்பின் போது சங்கர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குணசேகரன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினத்தில் லட்சுமி தனது சகோதரரை காணவில்லை என்று ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது தம்பியை பல வருடமாக காணவில்லை. 

கணவர் எங்கே என் அவரின் மனைவி ஜெயந்தியிடம் கேட்கையில், அவர் கேரளாவில் இருக்கிறார். அவ்வப்போது போனில் பேசுவோம் என்று கூறி வந்தார். ஆனால், குணசேகரன் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சிலர் பேசி வருகிறார்கள். எனது தம்பியை கண்டறிந்து தர வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் குணசேகரனின் மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்கையில் கொலை சம்பவம் அம்பலமானது. குணசேகரன் மதுபானம் அருந்தி தகராறு செய்து வரும் நிலையில், கடந்த 11 வருடத்திற்கு முன்னர் தம்பதியடையே ஏற்பட்ட தகராறில், ஜெயந்தி ஆத்திரத்தில் கணவரை தள்ளிவிட்டபோது, தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்துள்ளார். 

கணவரின் உடலை வீட்டருகே புதைத்த நிலையில், கடந்த 4 வருடத்திற்கு முன்னர் விஷயம் அரசால் புரசலாக ஊரில் பேசப்பட்டுள்ள தகவல் ஜெயந்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவரின் உடலை புதைத்த இடத்தில் இருந்த எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து ஆற்றில் வீசியதும் அம்பலமானது. இதனையடுத்து, ஜெயந்தியை கைது செய்த காவல் துறையினர், கொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்த அவரின் தந்தை மகராஜன் (வயது 75), அக்கா ஜோதி (வயது 40) ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ariyalur #Jayankondam #Wife #kill #Husband #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story