×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை! யாரு அப்பான்னே தெரில.... உடலை கட்டப்பையில் வைத்த சுற்றிய தாய்...! இறுதியில் ஆற்றங்கரையில் புதைத்த கொடூரம்! ஆரணியில் அரங்கேறிய பேரதிர்ச்சி...!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 20 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் தாய் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 20 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

விசாரணையில் வெளியான தகவல்

போலீசார் கூறுகையில், ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தனர். பின்னர், குழந்தையின் தந்தை யார் என்பது தொடர்பான குடும்பப் பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையை வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உலகம் கெட்டு போச்சு... ஆண் குழந்தையைப் பெற்ற பிளஸ் 2 மாணவி! அப்பா யாருன்னு கேட்டா ஆடிப்போய்ருவீங்க... பேரதிர்ச்சியில் பெற்றோர்!!!

இந்நிலையில் மனமுடைந்த தாய் லட்சுமி, தனது பச்சிளம் பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலை செய்தபின் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த லட்சுமி, குழந்தையின் உடலை ஒரு கட்டைப் பையில் வைத்துக்கொண்டு பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். இறுதியில் கூலிபடையிடம் பேசி ஆற்றங்கரையில் குழந்தையை புதைக்கச் செய்துள்ளார்.

கிராம மக்கள் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

குழந்தையின் உடல் மீட்பு

விசாரணையின்போது கிடைத்த தகவலின் பேரில், ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை அதிகாரிகள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். முதற்கட்ட பரிசோதனையில் குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாய் மருத்துவமனையில் அனுமதி

இந்த வழக்கில் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் விசாரணை மற்றும் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கின் அனைத்து அம்சங்களையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: கொஞ்சி குழாவி காதலனுடன் போனில் பேசிய தாய்..! அம்மா அம்மான்னு கூப்பிட்ட 3 வயசு குழந்தை.... ஆத்திரத்தில் அடுத்த நொடி குழந்தையை செய்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arani news #thiruvannamalai #Newborn Death #police investigation #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story