தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக அரசின் அப்துல்கலாம் விருது..! தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

தமிழக அரசின் அப்துல்கலாம் விருது!,..தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

applications-invited-for-dr-apj-abdulkalam-awards Advertisement

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சுதந்திரதினத்தன்று டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த நிலையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

A P J  Abdul Kalam

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#A P J Abdul Kalam #Former President #Abdul kalam Award #Tn govt #Independence day
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story