திருவண்ணாமலை இடுக்குபிள்ளையார் கோயில் தரிசனத்தில் சோகம்.. பக்தர் மூச்சுத்திணறி பலி.!
Tiruvannamalai News: கிரிவலப்பாதையில் நடந்த சோகம் ஆன்மீக பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் சாமி தரிசனத்தின்போது இளைஞர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர இளைஞர்:
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதனிடையே, கிரிவலப்பாதையில் இருக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில் தரிசனத்தின்போது, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கற்பூரத்தால் சேலையில் தீப்பிடித்து சோகம்.. மூதாட்டி மூச்சுத்திணறி பலி.. வெளிநாட்டில் இருந்த மகன் கண்ட ஷாக் காட்சி.!
நண்பர்களுடன் வந்தார்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியில் வசித்து வருபவர் மணிகுமார் (வயது 36). இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். கிரிவலம் சென்றபோது, இடுக்குபிள்ளையார் கோயிலில் நள்ளிரவில் சாமி தரிசனம் செய்தார்.
உடல் பருமன்:
அப்போது, உடல் பருமன் காரணமாக இடுக்கு பகுதியில் சிக்கிக்கொண்டவர், மூச்சுத்திணறி வெளியே வர இயலாமல் அவதிப்பட்டு இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறி அவதிப்பட்டவரை பொதுமக்கள் ஒன்றுகூடி மீட்டு இருக்கின்றனர். பின் உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
மரணம்:
அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் மணிகுமார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இடுக்கு பிள்ளையார் கோயில் தரிசனம் பிரபலமாகி வந்த நிலையில், உடல் பருமன் உள்ளவர்கள் இவ்வழியாக வந்து சாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: போலியோ சொட்டுமருந்து எடுத்துக்கொண்ட குழந்தை திடீர் மரணம்.. கடலூரில் பெற்றோர்கள் கண்ணீர்.!