×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

9 க்குள் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை நிறைவு செய்த தமிழன்... வியப்பை ஏற்படுத்தும் அசத்தல் தகவல்கள் இதோ.!

9 க்குள் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை நிறைவு செய்த தமிழன்... வியப்பை ஏற்படுத்தும் அசத்தல் தகவல்கள் இதோ.!

Advertisement


தமிழ் முன்னோர்கள் தங்களின் வாழ்வியல் கருத்துக்களை பலவிதமாக நம்மிடையே விட்டு சென்றுள்ளனர். இவற்றுக்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் குறைந்தளவே கிடைக்கப்பெற்றாலும், தவிர்க்க முடியாத விஷயங்களை நம்மிடம் அன்றாட பழக்கமாகவும், உணவு முறைகளாகவும் விட்டு சென்றுள்ளனர்.

அந்த வகையில், 9ல் இருந்து 1 வரை என தமிழர்கள் வாழ்வியலை குறைந்துகொண்டே முடித்த சுவாரசிய தகவல் குறிப்பு வாட்ஸப்பில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அவைகள் குறித்து இனி காணலாம். 

நவ தானியங்கள் என்று உண்ணும் உணவில் வலிமைதரும் தானியங்களை இணைத்து, அதற்கு அதிபதியாக நவக்கிரகத்தையும் அன்றே தமிழர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர். நெல்லுக்கு சந்திரன், கோதுமைக்கு சூரியன், துவரைக்கு செவ்வாய், பாசிப்பயறுக்கு புதன், கொண்டைக்கடலைக்கு குறு, மொச்சைக்கு சுக்கிரன், எள்ளுக்கு சனி, உளுந்துக்கு ராகு, கொள்ளுக்கு கேது என நவதானியத்தை நவக்கிரகத்துடன் தீர்மானித்து இருக்கிறான். 

நவ தானியத்திற்கு அடுத்தபடியாக திசைகளை அடுத்த இலக்கமான 8 க்குள் பிரித்து கொடுத்துவிட்டான். அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என 8 திசைகள் பிரிக்கப்பட்டன. திசைகள் ஏழாக பிரிக்கப்பட்டாலும், இசைகள் 7 ஆக பிரிக்கப்பட்டன. அவை ச ரி க ம ப த நி என்று அழைக்கப்படுகிறது.

இசை ஏழாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து சுவை இனிப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஆறாக பிரிக்கப்படுகிறது. நிலம் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. வசிக்கும் நிலம் 5 என்றால், நாம் சுவாசிக்கும் காற்று தென்றல், வாடை, கோடை, கொண்டல் என நான்காக பிரிக்கப்படுகிறது.

இதில், நாம் பேசும் மொழி இயல், இசை, நாடகம் என மூன்றாக பிரிக்கப்பட்டு, வாழ்க்கை அகம் - புறம் என இரண்டாக பிரித்து வழங்கப்பட்டு ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்து அதனை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்று வகுத்து கொடுத்துள்ளான். அதற்கு ஒரே சாட்சி உலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளில் உள்ள "ஒழுக்கம் விழுப்பந் தரலான்" என்ற குறள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Note: Title Image is Representative 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil #Tamil Scientist #தமிழர்கள் #தமிழ் முன்னோர்கள்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story