கூட்டணியை விட்டு விலகத்தயார் - அன்புமணி பரபரப்பு பேட்டி.. தமிழக அரசியலில் அடுத்த ஷாக்?
காங்கிரஸ் - பாஜக கூட்டுச்சதி செய்து வருவதாக அன்புமணி குற்றம் சாட்டினார்.
மேகதாது அணை விவகாரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப்பின் மிகப்பெரிய பேசுபொருளாக மீண்டும் உருவெடுத்துள்ளது.
அர்த்தம் இல்லை:
சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மேகதாது அணையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, அனுமதிக்கவில்லை. அங்கீகாரம் செய்யப்படாத ஒன்றில் நாம் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தம் இல்லாதது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு டாடா காட்டிட்டு.. விஜயுடன் கூட்டணி அமைத்து.. ஆட்சியை பிடிக்க திட்டம்.?!
அழுத்தம் வேண்டும்:
இந்த விஷயம் தொடர்பாக நாம் மத்திய அரசிடம், பிரதமரிடம் பேச வேண்டும். மேகதாது அணையை கட்ட அனுமதி கொடுக்க கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். கர்நாடகாவில் 62 டி.எம்.சி தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவில்லை.
கிடைக்காது:
அணையை கட்டும் முன்பாகவே நமக்கு தேவையான நீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டினால் தண்ணீர் எப்படி கொடுக்கும்? இதனால் தமிழ்நாடு முதல்வர் கர்நாடக செல்ல கூடாது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.
கவனம் வேண்டும்:
இந்த விஷயம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனை. இதனை வேறு விதமாக கர்நாடக கொண்டு செல்வதாக தெரிகிறது. இந்த மாய வலையில் முதல்வர் விஜய் விழுந்துவிடக்கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கூட்டுசதியில் ஈடுபடுகின்றன.
விலகுவோம்:
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது தண்ணீருக்காக தானே தவிர அணைக்காக அல்ல. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் உள்ளதா? ராகுல் காந்தி கர்நாடக மாநில அரசு மேகதாது அணையை கட்டக்கூடாது என்று கூறினால் நாங்கள் பாஜக-அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" என தெரிவித்தார்.