×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமமுக எம்எல்ஏ மாயமா? தவெகவுக்கு ஆதரவா? ஒரேயடியாக போட்டுத்தாக்கிய டிடிவி தினகரன்.!

TTV Dhinakaran: எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் வெளியான கடிதத்துக்கும் - அவருக்கும் சம்பந்தம் இல்லை என டி.டி.வி தினகரன் சென்னை கிண்டியில் பேட்டி அளித்தார்.

Advertisement

தனது பெயரில் போலியான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமமுக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

அதிரடி திருப்பம்:

AMMK MLA Kamaraj: 2026 சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றியடைந்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் என்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சி.பி.ஐ, சி.பி.எம் என 4 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், ஐ.யு.எம்.எல். திடீரென கைவிரித்தது. விசிக முடிவு இன்று அதிகாரபூர்வமாக தெரியவரும்.

இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!

ஆளுநருடன் சந்திப்பு:

இதனால் விஜய் முதல்வராவது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக எந்த கட்சியுடன் கூட்டணிக்கு தவெக பேசுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ, விஜய்க்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தமிழ்நாடு ஆளுநரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார். 

குதிரை பேரம்?

தொடர்ந்து, ஆளுநர் மாளிகையின் வெளியே செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "சமூக வலைத்தளத்தில் வெளியான கடிதத்துக்கு எம்.எல்.ஏ. காமராஜுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் செய்திகள் வெளியானபின் அவரும் மனம் வருந்தி மன்னார்குடியில் இருந்து கிளம்பி என்னை பார்க்க நேரில் சென்னை வந்துவிட்டார். காமராஜ் கடிதத்தை பார்த்ததும் புதுச்சேரியில் இருந்தவர் யாரிடமும் அழைப்பை பேசாமல் நேரில் இங்கு வந்துவிட்டார். அவர் மாயமாகவில்லை. இதுபோன்ற செயல்கள் குதிரை பேரத்தின் செயல்கள் ஆகும்" என தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் முழு பேட்டி:



வீடியோ நன்றி:பாலிமர்  

இதையும் படிங்க: #அதிர்ச்சி : ஆளுநர் மாளிகையில் விஜய்.... பனையூரில் இருந்த 10 எம்.எல்.ஏ-க்கள் திடீர் மாயம்.! அடுத்தக்கட்ட ஆதரவு யார்?..!!!

 
 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ammk #TVK #TN politics #குதிரை பேரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story