வீட்டிலிருந்து பள்ளிக்கு போன 8 வயது சிறுமி மாயம்! ஊருக்குள் சுற்றி திரிந்த 2 குடுகுடுப்பைக்காரர்கள்! மாந்திரீகம் செய்து.... திருப்பத்தூரில் பரபரப்பு!
ஆம்பூர் அருகே 8 வயது தனஸ்ரீ மாயமானதைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய குடுகுடுப்பைக்காரர்கள் சுற்றித் திரிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பத்தூரில் சிறுமி மாயமானது தொடர்பான சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் சென்றதாக நினைக்கப்பட்ட சிறுமி காணாமல் போனது, பின்னர் சந்தேகத்திற்குரிய வர்கள் அங்குலத்தில் சுற்றித்திரிந்தது போன்ற விவரங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
8 வயது தனஸ்ரீ மாயம் – பெற்றோருக்கு அதிர்ச்சி
ஆம்பூர் அருகே கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் பாபுவின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றதாகத் தெரிந்தாலும், காலை 10 மணிக்கு “தனஸ்ரீ வரவில்லை” என்று பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் தீவிரமாக தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், பாபு உடனே போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தை மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
இதையும் படிங்க: "அங்கிள் ப்ளீஸ் வேண்டாம்" அலறிய 6 ஆம் வகுப்பு சிறுமி.. அடங்காத பாக்யராஜுக்கு போக்ஸோ தண்டனை.!
சந்தேக நபர்கள் சுற்றித் திரிந்ததால் அச்சம்
விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை கோவிந்தாபுரம் பகுதியில் மூன்று குடுகுடுப்பைக்காரர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மக்களிடையே “மாந்திரீகம் செய்ய சிறுமி கடத்தப்பட்டாரா?” என்ற அச்சம் உருவானது.
இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு
இந்த அச்சநிலையில், குடுகுடுப்பைக்காரர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனஸ்ரீயை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை உண்மைக்குத் தடம் காட்டுமா என்பது குறித்து மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.