×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கூடாது... போக்குவரத்து துறை அறிவிப்பு!!

யாரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கூடாது... போக்குவரத்து துறை அறிவிப்பு!!

Advertisement

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகை விரைவில் வர இருப்பதால் இந்த சமயத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Should come #Regular work
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story