அஜித் கார் பந்தயம் இன்று தொடக்கம்... பச்சைக் கொடி காட்டுகிறார் முதலமைச்சர் விஜய்!
அஜித் கார் பந்தயம் இன்று தொடக்கம்... பச்சைக் கொடி காட்டுகிறார் முதலமைச்சர் விஜய்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச கார் பந்தயத் தளத்தில், ‘Michelin Le Mans Cup’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், தனது அணியுடன் போட்டியிடுகிறார்.
இந்தப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்திய வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் என ‘Michelin Le Mans Cup’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அஜித் குமாரின் அணி, 2026-ம் ஆண்டு Michelin Le Mans Cup தொடரின் LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்று வருகிறது. சில்வர்ஸ்டோன் சுற்றில் அஜித்துடன் மேலும் இந்திய கார் பந்தய வீரர்களும் களமிறங்குகின்றனர். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING : போடு வெடிய.... குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.3000 வரவு....! சற்றுமுன் முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!
இந்த பந்தயம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு தொடங்கி 11.45 மணிக்கு நிறைவடையும் என கூறப்படுகிறது. அஜித் குமார் போட்டியிடும் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைப்பது, இருவரது ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காலி பாட்டில் வாங்க புதிய நடைமுறை... ரூ.10 திரும்ப கிடைக்கும்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!