ஏர் இந்தியா விமானம் பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறங்கியதால் பரபரப்பு! ஊழியர்களிடையே மோதல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ..
ஏர் இந்தியா விமானம் பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறங்கிய விமானம்! ஊழியர்களிடையே மோதல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ..
ஏர் இந்தியா விமானம் லக்கேஜ் ஏற்றாமல் தரையிறங்கிய பரபரப்பு
சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னர், தற்போது மற்றொரு விமான விபரீத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் லக்கேஜ் இல்லாமல் தரையிறங்கிய விமானம்
ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையத்தை சென்றடைந்த இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், பயணிகளின் சாமான்கள் ஏற்றப்படாமல் இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு
லக்கேஜ்கள் இல்லாமல் வந்த பயணிகள், விமான நிலையத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏர் இந்தியா தரப்பில் விளக்கம்
வீடியோவில், ஒரு ஊழியர் கூறும் வகையில் – பலத்த மழை, குறுகிய ஓடுபாதை, மற்றும் விமானத்தின் அதிக எடையின் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக லக்கேஜ்கள் ஏற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சண்டையில் கோபமடைந்து கணவன் மீது கொதிக்க கொதிக்க அதையெல்லாம் உடம்பில் ஊற்றிய மனைவி! இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்!
ஏர் இந்தியா நிறுவனம், தவறவிட்ட அனைத்து லக்கேஜ்களையும் அடுத்த நாள் காலை 8 மணிக்குள் பயணிகளிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விமானம் திசைமாறியது
மேலும் டெல்லியில் இருந்து பாட்னா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக வாரணாசிக்கு மாற்றி திருப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சார்ஜ் கொஞ்சம் போடணும் மேடம்! வீட்டிற்குள் வந்து பெண்ணிடம் அத்துமீறிய டெலிவரி பாய்! அடுத்து நடந்த திகிலூட்டும் செயல்! சென்னையில பரபரப்பு....