கோடிக்கணக்கில் சொத்து..! விஜய் பட நடிகையுடன் உல்லாச வாழ்க்கை..! லலிதா ஜிவல்லரி கொள்ளையன் முருகனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?
Aids murugan current status

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய திருட்டு சம்பவங்களில் ஓன்று திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவம். ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு நடந்த இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
முருகனுக்கு ஏற்கனவே எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறப்பட்டநிலையில் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளையன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கைகளும், இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்கு வசதியாக முருகனை ஜாமீனில் எடுப்பதற்காக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் முயற்சியில் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.