×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோல்வி பயத்தில் அஞ்சி ஆயிரம்.. கோடைக்கால சிறப்புத் தொகை - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!

Edappadi Palanisamy on Magalir Urimaithogai: மகளிர் உரிமைத்தொகையுடன் தமிழ்நாடு அரசு வழங்கிய கோடைகால சிறப்புத்தொகை குறித்து எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு பணம் கொடுக்கும் அரசின் செயலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி மீது விமர்சனம் முன்வைத்துள்ளார்.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வரும் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு உதவித்தொகை என மாத உரிமைத்தொகை பெற்று வரும் மகளிரின் குடும்ப அட்டைக்கான வங்கிக்கணக்கில் ரூ.5000 வரவு வைத்துள்ளது. இந்த தகவல் தமிழக மகளிரிடையே மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும், பிற அரசியல் கட்சிகள் இது தேர்தல் நேர பாசாங்கு நடவடிக்கை என விமர்சித்து வருகின்றனர்.

கோடைக்கால சிறப்புத் தொகை:

இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வலைப்பதிவில், "தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே மு.க. ஸ்டாலின் அவர்களே. 

இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!

விடியாத ஆட்சி:

சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன? செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை:

இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே... யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விசில் சத்தம் தாங்க முடியலையா? அச்சத்தின் உச்சத்தில் தமிழக அரசு.. தவெக விஜய் கடும் தாக்கு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #AIADMK #edappadi palanisamy #Magalir Urimaithogai #அதிமுக #எடப்பாடி பழனிச்சாமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story