#BREAKING: 'உதிர்ந்த ரோமங்கள்' அதிமுக Vs தவெக விவகாரம்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்.. பரபரப்பு பேட்டி.. முழு விபரம்.!
Agri Krishnamoorthy Latest Pressmeet தூய ஆட்சியை கொடுப்பதாக கூறிய தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் அரசியல் செய்து வருகிறார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எண்ணெயும் தண்ணீரும் இணையாது என்பதைப்போல, திமுகவை அகற்ற தோற்றுவிக்கப்பட்ட அதிமுக ஒருபோதும் அரசியல் கூட்டணிக்காக இணையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம்:
திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைந்துவிடுவார்கள் என அந்த கட்சியைச் சேர்ந்த பலரும் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஏன்? தவெகவில் ஆட்களே இல்லையா? அந்த கட்சியை நடத்த பலம் இல்லையா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், நிர்வாகிகளை குதிரை பேரம் கொண்டு இழுக்க வேண்டும்? தவெக தலைவர் தூய ஆட்சியை தருவதாக நாட்டு மக்களிடம் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுவது என்ன? அமைச்சர் பதவியில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு மக்களுக்கு பணிகளை செய்வதைவிட, குதிரை பேரத்தின் வாயிலாக அதிமுகவினரை தன்வசப்படுத்தும் பணிகளை செய்வதாக தமிழக மக்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுக கோட்டையில் இறங்கியடித்த விஜய்.. விமர்சனம் செய்யாதது ஏன்? தெறி பேச்சு.!
கட்சி தாவினார்:
1996ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் தோல்வியை தழுவினார். அன்று ஒருசில அதிமுகவினர் கழகத்துக்கு துரோகம் செய்துவிட்டு பிரிந்து சென்றார்கள். அவர்களை உதிர்ந்த ரோமங்கள் என்று ஜெயலலிதா அடையாளப்படுத்தினர். அதே பதிலை இன்று நாங்களும் சொல்கிறோம். அம்மா கூறிய உதிர்ந்த ரோமங்கள் எங்களின் நினைவுக்கு வருகிறது. ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் பணியாற்றினார். அங்கிருந்து நீக்கப்பட்டபின்னர் விசிகவுக்கு சென்றார். அங்கு 6 மாதம் செய்த தவறுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விலைக்கு வாங்குகிறார்:
பின் அதிமுகவுக்கு வந்து, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து என்னை அதிமுகவில் இணைத்துக்கொள்ளுங்கள். துணைப்பொதுச்செயலாளர் பதவியை தாருங்கள் என கூறினார். எடப்பாடி பழனிச்சாமி அதனை மறுத்துவிட்டார். அதன்பின்னரே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது அமைச்சர் பதவியை விட அதிமுகவினரை இழுத்து குதிரை பேரம் செய்கிறார். இது லாட்டரி வியாபாரமா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்கி வருகிறார். இவர்களின் அரசியல் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த தவறுகள் தொடர்ந்தால் சிபிஐ விசாரணைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையுடன் கோரிக்கை முன்வைக்கப்படும்.
ஜனநாயகத்துக்கு முரண்:
அதிமுகவும், திமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாகவும், இதுதான் குதிரை பேரம் எனவும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் பேசி வருகிறார். அதிமுக தொடங்கப்பட்டதே திமுக என்ற தீய சக்தியை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான். தண்ணீரும் எண்ணெய்யும் இணையுமா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து யாரிடமும் பேசவில்லை. ஆட்சியின் குறைபாடுகளை மடைமாற்ற ஆட்சியாளர்கள் பொய்களை பரப்பி வருகிறார்கள். ஆதவ் அர்ஜுனா - புஸ்ஸி ஆனந்த் இடையே ஏற்பட்டுள்ள தலைமைக்கான மோதல் ஏற்பட்டுள்ளது. 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வைத்தது பலகோடி ரூபாய் செலவினால் என்பதை மக்கள் அறிவார்கள். அதற்கு மக்கள் பதிலடி தருவார்கள். விஜய்க்கு அடுத்த நபர் என்ற பெயரை பிடிக்க அதிமுகவினரை குதிரை பேரத்தினால் வாங்கி வருகிறார்கள். இது தவறான அரசியல். ஜனநாயகத்துக்கு முரணானது" என பேசினார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு வாக்களித்துவிட்டு வருந்தும் வாக்காளர்கள் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆதங்கம்.!