×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதெல்லாம் தேவையா? 1 மில்லியன் வியூஸ்களுக்கு ஆசைப்பட்டு... சிக்கலில் சிக்கிய வாலிவர்! இப்போ இருந்தது போச்சு... பகீர் சம்பவம்..!!!

அதிக வியூஸ்களுக்காக பணக்கட்டுகள் நிரம்பிய லாரி வீடியோவை ஏஐ மூலம் போலியாக உருவாக்கி வெளியிட்ட இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

சமூக வலைதளங்களில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வந்த இளைஞர் ஒருவர், அதிக வியூஸ்களை பெற வேண்டும் என்ற ஆசையில் சிக்கலில் மாட்டியுள்ளார். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்ட அவர், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வருமானம் ஈட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய ஒரு போலி வீடியோ அவரை போலீஸ் விசாரணை வரை கொண்டு சென்றுள்ளது.

1 மில்லியன் வியூஸுக்காக உருவாக்கிய போலி வீடியோ

அதிக கவனம் பெற வேண்டும் என்ற நோக்கில், பணக்கட்டுகள் நிரம்பிய லாரி ஒன்று சாலையில் செல்வது போன்ற காட்சியை ஏஐ போலி வீடியோ மூலம் உருவாக்கியுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் வியூஸ்களை தாண்டும் என எதிர்பார்த்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே வீடியோ வேகமாக பரவத் தொடங்கியது.

இதையும் படிங்க: சற்று முன்... தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்! வெளியான திடீர் அறிவிப்பு...!!!

வீடியோவை பார்த்த போலீஸார் நடத்திய விசாரணை

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ போலீஸாரின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து, அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் காட்டப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல என்பதும், அவை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வீடியோவை உருவாக்கி பதிவிட்ட இளைஞரை போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிக வியூஸ்களை பெற வேண்டும் என்பதற்காகவே வீடியோவை உருவாக்கியதாக தெரியவந்துள்ளது. போலீஸாரிடம் அவர், வியூஸ்களுக்காக ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்காக தற்போது பெரும் வேதனை அடைவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். Instagram வீடியோ மூலம் அதிக கவனம் பெற நினைத்த முயற்சி, இறுதியில் போலீஸ் நடவடிக்கையில் முடிந்துள்ளது.

 

இதையும் படிங்க: பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AI போலி வீடியோ #Instagram Creator #வியூஸ் ஆசை #போலீஸ் கைது #சமூக வலைதளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story