தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த செங்கல்பட்டு சுங்கசாவடிகள்.! இன்று முதல் கட்டணம் வசூலிப்பு!

After a very long time now opened senkalpattu highway

After a very long time now opened senkalpattu highway Advertisement

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் முறையாக இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20 தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகளை பிரதமர் மோடி அமல்படுத்தினார்.

இதனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து ஏப்ரல் 20 நள்ளிரவில் 12 மணி முதல் சுங்கவரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கசாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

sengalpattu

அதாவது கடந்த ஜனவரி மாதம் அதிகப்படியான மக்கள் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்றதால் சுங்கசாவடிகளை கடக்கும் போது அதிக நேரம் ஆகி வாகனங்கள் அனைத்தும் அதிக நேரம் தேங்கி நிற்கக்கூடிய சூழல் ஏற்ப்பட்டது. அதனால் தான் சுங்கவரியின்றி வாகனங்கள் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு சுங்கசாவடியை திறக்க தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் செங்கல்பட்டு சுங்கசாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு சுங்கவரி வசூல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sengalpattu #Highway #Toll ticket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story