19 வயது கல்லூரி மாணவியுடன் 38 வயது எம்.எல்.ஏ திருமணம்! இளம் பெண்ணின் தந்தை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை.
இளம் பெண் ஒருவருடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு அவர்கள் திருமணம் செய்துகொண்டநிலையில் அந்த பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இளம் பெண் ஒருவருடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு அவர்கள் திருமணம் செய்துகொண்டநிலையில் அந்த பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு (38), இவருக்கும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு பயின்று வரும் சௌந்தர்யா (19) என்ற இளம் பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், எம்.எல்.ஏ பிரபு தமக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், தனது மகளை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி அந்த பெண்ணின் தந்தை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் சௌந்தர்யாவின் விருப்பதுடன்தான் திருமணம் நடைபெற்றதாகவும், நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை எனவும் எம்.எல்.ஏ பிரபு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், திருமண கோலத்தில் மணப்பெண் சிரித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் தமது மகளை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தமது மகளை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தமது மகளை மீட்டுத்தரவேண்டும் என பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.