×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்கள் ஆதார் எண், எங்கு எதற்காக பயன்பட்டுள்ளது தெரிந்து கொள்ள வேண்டுமா?இதோ எளிய வழி.!

adhar card - where used any department - simple tips

Advertisement

இந்திய அரசால் அணைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க ஆதார் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் நமது புகைப்படம் மற்றும் முகவரியும் அட்டையில் பதிவு செய்யபட்டிருக்கும். தற்போது கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, பான் எண், மகளிர் குழு, சிம் கார்டு வாங்குவது, அரசு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் எண் முக்கியமாக தேவைப்படுகிறது.

இவ்வாறு பல வகைகளில் நமக்கு பயன்படும் ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் நமது ஆதார் அட்டையை யாரேனும் தவறான வழிகளில் பயன்படுத்தி உள்ளார்களா என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள  வேண்டும். அதற்கான எளிய வழிமுறைகள் இதோ:

UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in செல்லவும். அதன் முகப்பு பக்கத்தில் ஆதார் சேவைகள்(Aadhaar Services) என்ற லிங்கை கிளிக் செய்யவும். அப்போது பட்டியல் ஒன்று திறக்கும். அதில் ஆதார் பயன்பாட்டு விவரம்(Aadhaar Authentication History) என்ற லிங்கை கிளிக் செய்யவும். தற்போது புதிய விண்டோ(Window) திறக்கும். அதில் கேட்கப்பட்ட இடத்தில், உங்களில் ஆதார் எண்ணை(Aadhaar Number) டைப் செய்யவும்.

இதையடுத்து OTP ஆனது, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு(Mobile Number) வரும். அதனை விண்டோவில்(Window) கேட்கப்பட்ட இடத்தில் டைப் செய்யவும். இனி உங்கள் ஆதார் பயன்பாட்டு விவரங்களைக் காணலாம். அதிகபட்சமாக 50 விவரங்கள் ஒரே பக்கத்தில் தெரியும். உங்களுக்கு தேவையெனில், அந்த விவரங்களை டவுன்லோடு அல்லது பிரண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#adhar card #tamilnadu #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story