தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.! மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து.!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.! மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து.!

actor-vijay-wishes-to-12th-students-after-results Advertisement

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.03% ஆக உள்ளது. 

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். 

vijay

விரைவில் சந்திப்போம்

எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயாராகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கோவை புயல்: உதயநிதி ஸ்டாலினும், விஜயும் ஒரே நேரத்தில் கோவையில் – பரபரப்பான நிகழ்வுகள்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #result #student
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story