×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொஞ்சமாவது மனசாட்சி இருக்குதா.! அவர்களெல்லாம் என்ன தேச விரோதிகளா? அரசுக்கு நடிகர் விஜய் கடும் கண்டனம்!!

13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5 மற்றும் 6ல் தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்தம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தர கோரிக்கை விடுத்தும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் கட்டிடம் முன்பு 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், தமிழக வெற்றி கழகம் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த பாசிசத் திமுக அரசுக்கு கண்டனம். 
குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. 

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத 
அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியை உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தை காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களது குடும்பத்தினரோடு கூட தொடர்புகொள்ள முடியாதவகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மர்ம உறுப்பில் மிளகாய்ப்பொடி திணித்து, சூடு போட்ட மாமனார் & மாமியார்.! பகீர் காரணம்.!

குடும்பத்தினரோடு கூட தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சொல்லிதான் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் நீங்கள் இன்னும் நிறைவேற்றவில்லை? 

அப்படி கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப்போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: JustIN: "நாய் ஏத்துற வண்டியில் நான் ஏறமாட்டேன்" - பாஜக எச். ராஜா டென்ஷன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #arrest #sanitary workers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story