தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: தமிழகமே எதிர்பார்த்த நடிகர் விஜயின் வழக்கு.. இன்று வெளியாகிறது தீர்ப்பு.. ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள்.!

#BigNews: தமிழகமே எதிர்பார்த்த நடிகர் விஜயின் வழக்கு.. இன்று வெளியாகிறது தீர்ப்பு.. ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள்.!

Actor Vijay Case Appeal Car Penalty Today Judgement Advertisement

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், அமெரிக்காவில் இருந்து சொகுசு கார் ஒன்றை கடந்த 2005-ம் ஆண்டு இறக்குமதி செய்தார். இந்த காருக்கு செலுத்தவேண்டிய நுழைவு வரியினை செலுத்த விஜய் தாமதப்படுத்திய நிலையில் வணிக வரித்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையில், விஜயின் தரப்பில் நுழைவு வரி செலுத்தப்படவே, அதிகப்படியான அபராதம் விதித்துள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அபராத நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. 

actor vijay

இந்த மனு மீதான விசாரணை மார்ச் 14 ஆம் தேதி நீதிபதி அமர்வு முன் வந்தபோது, விஜயின் மனுவை அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிகவரித்துறை தெரிவிக்க, மேற்படி விபரங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை தெரிவிக்காமல் தள்ளிவைத்தார். 

இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ள காரணத்தால், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கண்டனம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor vijay #case #Car Penalty #judgement #tamilnadu #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story