இரிடிய பெயரில் மோசடி.. தமிழ் நடிகரிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்.. பகீர் தகவல்.!
இரிடிய பெயரில் மோசடி.. தமிழ் நடிகரிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்.. பகீர் தகவல்.!
தமிழில் கிழக்கு சீமையிலே, ராமன் அப்துல்லா, பசும்பொன் போன்ற பல படங்களில் சந்தித்துள்ள நடிகர் விக்னேஷ். இவர் இருடிய மோசடியில் தான் ஏமார்ந்துவிட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "கிண்டி தொழிற்பேட்டையில் எனக்கு சொந்தமான உயர்ரக சலூன் கடை உள்ளது. இந்த கடைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் வாடிக்கையாளராக ராம் பிரபு என்பவர் வந்து செல்வார்.
அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, இந்திய அரசின் அனுமதியுடன் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மதிப்புள்ள இரிடியதை விற்பனை செய்ததால் தனக்கு பாதுகாப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், ரூ.5 கோடி முதலீடு செய்தால் இரிடிய தொழிலில் ரூ.500 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று கதையை அளந்து விட்டுள்ளார்.
மேலும், அது தொடர்பான கருத்தரங்குக்கு என்னை அளித்து சென்ற ராம் பிரபு, முக்கிய பிரமுகர்களை அறிமுகம் செய்து இரிடிய விற்பனையை சட்டபூர்வ தொழில் போல நம்ப வைத்தார். அதனை நம்பி அவருக்கு ரூ.1,81,79,000 பணம் கொடுத்துள்ளேன். பல நாட்கள் ஆகியும் பணம் இரட்டிப்பு ஆகாத காரணத்தால், ராம் பிரபுவிடம் கேட்டேன்.
அவர் கன்டைனரில் ரூ.500 கோடி வந்துகொண்டு இருக்கிறது. அது வந்ததும் வட்டியோடு தருகிறேன் என்று தெரிவித்தார். அவரின் மீது சந்தேகம் எழுந்து விசாரித்தபோது, மோசடி செயல் தெரியவந்தது. இதனால் பணம் கேட்டபோது பணம் கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார். என்னைப்போல பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.