தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென வெடித்த ஏசி.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காவலருக்கு நேர்ந்த பரிதாபம்.! தீவிர சிகிச்சையில் மனைவி.!

AC Burst and one died in Thirupathur

AC Burst and one died in Thirupathur Advertisement

திருபத்துத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபத்துத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்து வக்கனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வந்த இவர் நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏசி வெடித்து சண்முகம் மீது தீ பற்றியுள்ளது.

Mysteries

சண்முகத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சண்முகத்தை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் தீ பற்றியுள்ளது. இருவரின் அலறல் சத்தத்தையும் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சண்முகம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #AC burst
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story