காலியான பால்கவர்களை வீசிடாதீங்க! இங்கே கொடுத்து பணம் பெற்று கொள்ளுங்கள்!! ஆவின் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
aavin factory new announcement about milk waste packet

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து புதிய சட்டம் ஒன்றை இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. மேலும் அதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும், எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது ஆவின் பால் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி ஆவின் வாடிக்கையாளர்கள் காலியான பால் கவர்களை தூக்கி போடாமல் முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆவின் காலி பாக்கெட்டுகளை சில்லறை வியாபாரிகள், பால் விற்பனை நிலையங்கள், முகவர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து ஒரு பாக்கெட்டுக்கு ரூ.10 பைசா என்ற வீதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.