தமிழக எம்பிக்கள் குழு ஜனாதிபதி சந்தித்து அளித்த மனு..... ஆளுநர் நாளை டெல்லி பயணம்..!!
தமிழக எம்பிக்கள் குழு ஜனாதிபதி சந்தித்து அளித்த மனு..... ஆளுநர் நாளை டெல்லி பயணம்..!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகலில் டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, டி.ஆர்.பாலு உள்ளிட்ட தமிழக அரசின் பிரநிதிகள் சந்தித்தனர். இந்நிலையில் நாளை பிற்பகல் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு சட்டசபையின் இந்த வருடத்தின் முதல் கூட்டம் கடந்த 9-ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்தார். இதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக, தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த நிலையில், ஆளுநர் நாளை டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்.