×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்.! அதிர்ச்சி காரணம்.!

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்.! அதிர்ச்சி காரணம்.!

Advertisement

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரத்வாஜ்-லதா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. இருவரும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இந்தநிலையில் லதா தனது ஒரே மகன் தவஜ் (14) என்பவருடன் வசித்து வந்துள்ளார். லதாவின் மகன் தவஜ் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை லேசாக மயங்கிய நிலையில் இருந்த தவஜ் வீட்டின் அருகே வசிக்கும் நபர் ஒருவரை அழைத்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லதா இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த தவஜை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தவஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் பொருளாதார வசதி இன்றி இருந்து வந்த லதா தற்கொலை முடிவெடுத்து தனது மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mother #son #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story