கலைஞர் மகளிர் உரிமை தொகை: மேல்முறையீடு செய்ய குவிந்த பெண்கள்!!
கலைஞர் மகளிர் உரிமை தொகை: மேல்முறையீடு செய்ய குவிந்த பெண்கள்!!
கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து மேல்முறையீடு செய்ய குவிந்த பெண்கள் கூட்டம்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் குடும்ப பெண்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்குதல் என்பதாகும்.
இதற்காக முன்னதாகவே விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பின் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாயும் வந்து சேர்ந்தது.
அந்த வகையில், பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 1000 ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் அதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்கான செயலில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.