15 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 13 வயது சிறுமி; மகிழ்ச்சியாக இருப்பதாக மீசையை முறுக்கி வீடியோ ரிலீஸ்.!
15 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 13 வயது சிறுமி; மகிழ்ச்சியாக இருப்பதாக மீசையை முறுக்கி வீடியோ ரிலீஸ்.!
சமூக வலைதளத்தின் ஆதிக்கம் நிறைந்த காலத்தில், இன்றுள்ள இளம் தலைமுறை பல்வேறு விஷயங்களை முந்தைய தலைமுறையை விட விரைந்து தெரிந்துகொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம், யூடியூப், கூகுள் என பெற்றோருக்கு தெரியாத பல தகவல்களையும் உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் நபர்கள், அதில் உள்ள சாதக-பாதகங்களை வயதின் தன்மை காரணமாக ஆராயாமல் செயல்படுகின்றனர்.
இதனால் வீண் பிரச்சனைகளிலும் சிலநேரம் சிக்கிக்கொண்டு அவதிப்படுகின்றனர். ஒருசிலர் பயத்தில் உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில், 15 வயதுடைய சிறுவன் ஒருவனுடன், 13 வயதுள்ள சிறுமி ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!
இருவரும் காதலித்து வந்ததாகவும், வீட்டை விட்டு நாங்கள் வெளியேறிவிட்டோம் எனவும் இருவரும் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், ஆயுஷுக்கு எதாவது நேர்ந்தால் எனது தந்தை, மாமா ஆகியோர் காரணம் எனவும் சிறுமி பேசி இருக்கிறார்.
தங்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை பார்வையிலேயே தூக்கிவிடுவேன் என்ற பாணியில், அரும்பாத மீசையை டிசைனாக வடித்துக்கொண்ட இளைஞர், அதனை இழுத்து காண்பிக்கிறார். இதுதொடர்பான காணொளி வைரலாகி வரும் நிலையில், சிறுமியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படையுங்கள் அல்லது காப்பகத்தில் சேருங்கள் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நண்பனின் காதலிக்கு ரகசிய வலை.. துரோகத்திற்கு கிடைத்த விபரீத பரிசு.. தவிக்கும் குடும்பம்.!