×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை... " வாயில் செல்லோடேப்புடன் மீட்கப்பட்ட சடலங்கள்.!! வினையான வட்டி.!!

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை... வாயில் செல்லோடேப்புடன் மீட்கப்பட்ட சடலங்கள்.!! வினையான வட்டி.!!

Advertisement

திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை மற்றும் பூதலப்பட்டு  தேசிய நெடுஞ்சாலையின் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள  இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவி ஜெயமாலா, இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(9), ஹர்ஷினி (3) என்ற இரு மகள்கள் உள்ளனர். வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ஜெயமாலா 2 மகள்களுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்த கணவர், மனைவிக்கு அடிக்கடி பணம் அனுப்பி வைத்துள்ளார். பணத்தை ஜெயமாலா தன் பெரியம்மா மகன் கலைச்செல்வன் உதவியோடு வட்டிக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் வட்டிக்கு விடும் தொழிலில்  ஜெயமலாக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2024-ல் குவைத்திலிருந்து வந்த கணவர், அனுப்பிய பணங்களின் விவரத்தை கேட்டுள்ளார். அதற்கு மனைவியிடம் சரியான பதில் வராத நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு மீண்டும் அவர் குவைத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில்  கடந்த ஜூலை மாதம்  மனைவி, மகளை காணவில்லை எனும் தகவலை கேள்விப்பட்டு சொந்த ஊருக்கு வந்து விசாரித்துள்ளார். எந்த தகவலும் கிடைக்காத நிலையில் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!

விசாரணையில் திருப்பதி மாவட்டம்   வனப்பகுதியில் ஜெயமாலா, 2 மகள்கள் மற்றும் பெரியம்மா மகன் கலைச்செல்வன் ஆகிய 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஜெயமாலா மற்றும் கலைச்செல்வன் முகத்தில் துணியை போர்த்தி செல்லோ டேப் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கடுத்து சடலங்கலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வட்டி தொழிலில் ஏற்பட்ட முன்பகை  காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆந்திரா போலீசாருடன்  இணைந்து தமிழக காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: விபச்சாரத்தை தட்டி கேட்டதில் தகராறு... அப்பாவி பெண் தூக்கு போட்டு தற்கொலை.!! உறவினர்கள் போராட்டம்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Crime #Murder #Private Finance #Tirupathi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story