×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: அதிரடி ஊதிய உயர்வு! சம்பளம் ரூ.18,000 இல்ல இனி ரூ.46,000.... வந்தாச்சு செம ஹேப்பி நியூஸ்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறித்து ஏப்ரல் 13ல் முக்கிய கூட்டம். ஊதிய உயர்வு குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி. எட்டாவது ஊதியக் குழு தொடர்பான பரிந்துரைகளை முடிவு செய்யும் கூட்டம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 13ல் முக்கிய ஆலோசனை கூட்டம்

தகவலின்படி, தேசிய கவுன்சிலின் வரைவுக் குழு இந்தக் கூட்டத்தை நடத்துகிறது. பல மாதங்களாக நிலுவையில் இருந்த பரிந்துரைகள் குறித்து இதில் இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம். இதனால் மத்திய அரசு பணியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Fitment Factor உயர்வு – சம்பளத்தில் பெரிய மாற்றம்?

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக பேசப்படுவது Fitment Factor பற்றியதே. அது 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ஊழியர்களின் ஊதியத்தில் 30% முதல் 34% வரை உயர்வு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்தில் கணிசமான உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை! கூட்டத்தின் இடம், தேதி, நேரம் அறிவிப்பு.! சூடு பிடிக்கும் தவெக அரசியல்..!!!

உதாரணமாக, தற்போது ₹18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒருவரின் சம்பளம், இந்த மாற்றத்தால் ₹46,000-க்கும் மேல் செல்லும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் ஊதிய உயர்வு நேரடியாக வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த இந்த மாற்றம், நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். கூட்ட முடிவுகள் வெளியானதும், அடுத்த கட்ட செயல்பாடுகள் விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#8th Pay Commission #Fitment Factor #central govt employees #ஊதிய உயர்வு #pensioners
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story