65 வயது மூதாட்டியை அடித்துக்கொன்று வன்கொடுமை.. திருட வந்து பணம் இல்லாததால் பகீர் செயல்.!
Thoothukudi News: மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மூதாட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் காளியப்பன். இவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 65). இவரது கணவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மகள் சத்யாவுடன் தனியே வசித்து வருகிறார். இவர் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஜூலை 15 ம் தேதி சத்யா வெளியூர் சென்றபோது, முத்துலட்சுமி வீட்டின் திண்ணையில் உறங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!
கொலை:
பின் மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, மூதாட்டி தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக சத்யா கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் முத்துலெட்சுமியை கொலை செய்தது உறுதியானது.
அதிர்ச்சி காவல்:
அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசித்து வருபவர் இன்னசன்ட் ரீகன் (வயது 37). இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தூத்துக்குடியில் தங்கியிருந்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மீது குமரியில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
திருட வந்தார்:
சம்பவத்தன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடி ஊர் சுற்றியவர், இந்திரா நகரில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பணம் பறிக்கச் சென்றுள்ளார். சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் மயங்கிவிடவே, பணம் கிடைக்காததால் பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப்பின் ரீகன் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!