68 வயது தாத்தா, 4 வயது பக்கத்து வீட்டு சிறுமி.. தாத்தாவால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! சென்னை பகீர்..!
62 years old man arrested in pocso at chennai
4 வயது சிறுமி ஒருவருக்கு 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அருகே உள்ள அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ஜெகன்நாதராவ்.
சொந்தமாக தொழில் செய்துவரும் ஜெகன்நாதராவ் தனது வீட்டின் அருகே இருக்கும் 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. முதியவர் கொடுத்த பாலியல் தொல்லையை சிறுமி பெற்றோரிடம் கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை அடுத்து ஜெகன்நாதராவ் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் முதியவர் ஜெகன்நாதராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.