×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிரடி அறிவிப்பு: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை..! கலெக்டர் அதிரடி..! எங்கு தெரியுமா..?

6 months jail if not wearing mask in Udhakai

Advertisement

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக  மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் போன்ற அறிவுரைகளை அரசு வழங்கிவருகிறது.

இருப்பினும் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றிவரும் சம்பவங்களும் நடந்துவருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நோயைப் பரப்பும் வகையில்  பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #jail
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story