35 வயது பெண்ணுக்கு.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. படிக்கட்டுப்பயணம் தலைநசுங்கி உயிர் பிரிந்த சோகம்..!
Salem News: படிக்கட்டு பயணத்தால் பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரயிலில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சேலம் நோக்கி வந்தது:
Nepal Women Dies footboard: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கன்னியாகுமரி நோக்கி பயணம் செய்த அதிவிரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை கடந்து சேலம் நோக்கி வந்துகொண்டு இருந்தது.
இதையும் படிங்க: #Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!
இரயிலை நிறுத்தினர்:
இரவு சுமார் 8 மணியளவில் ரயில் பொம்மிடி பகுதியில் வந்தபோது, முன்பதிவு இல்லாத பெட்டியில், படிக்கட்டு பகுதியில் நின்ற பெண் தவறி கீழே விழுந்தார். இதனைக்கண்ட பெண்ணின் கணவர், பயணிகள் உடனடியாக ரயிலின் அபய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தலை நசுங்கி மரணம்:
அவர்கள் இறங்கிச் சென்று பார்த்தபோது, பெண் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின் ரயில் சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது. தகவல் அறிந்து வந்த சேலம் ரயில்வே காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கழிவறை அருகில் நின்றவருக்கு சோகம்:
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெண் நேபாளம் நாட்டைச் சேர்ந்த கல்பனா (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் தனது கணவர், மகனுடன் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்ல கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி இருக்கிறார். பயணத்தின்போது கழிவறைக்கு செல்லும் பகுதியில் இருந்த இடத்தில ஓரமாக நின்று பயணிக்க, அப்போது நிலைதடுமாறி விழுந்தது தெரியவந்தது.
படிக்கட்டு பயணம் எப்போதும் ஆபத்தை தரும் என்பதற்கு உதாரணமாக இந்த சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கணவனை காக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி.. குழந்தைகள் கண்முன் சோகம்.!