×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சத்தமேஇன்றி கடத்தப்பட்ட 3 வயது குழந்தை!! அலேக்காக தூக்கிய போலீசார்! வெளியான பகீர் பின்னணி!!

3 year child kidnapped by servant

Advertisement

சென்னை அமைந்தகரை செனாய் நகரில் வசித்து வருபவர் அருள்ராஜ். 35 வயது நிறைந்த இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு அன்விகா என்ற மூன்றரை வயது மகள் உள்ளார் . அவர் தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அம்பிகா என்ற திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று அன்விகாவை பள்ளியிலிருந்து அழைத்து வந்த நந்தினி அவரை வேலைக்காரப் பெண் அம்பிகாவிடம் விட்டுவிட்டு வீட்டில் உள்ள வேலைகளை செய்து கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் வேலை முடித்துவந்து பார்த்தபோது அம்பிகா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டில் இல்லை.இந்நிலையில் அவர் வெளியில் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். அப்பொழுது  டாக்டர் நந்தினியின் செல்போன் என்னை தொடர்புக்கொண்ட அம்பிகா என்னையும் அன்விகாவையும் யாரோ கடத்தி விட்டார்கள் காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார், 
 

இதனால் பதட்டமடைந்த நந்தினி இது குறித்து தனது கணவரிடம் தகவல் தெரிவித்தநிலையில் அதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் போன் செய்த மற்றொரு நபர் உங்களது மகள் மற்றும் வேலைக்காரப் பெண் இருவரும் உயிரோடு வேண்டும் என்றால் 60 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் இதுகுறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மேலும் சத்தமே இன்றி இருவர் கடத்தப்பட்டதால் வேலைக்காரப்பெண்ணிற்கும் இதில் தொடர்பு இருக்குமோ என சந்தேகமடைந்து  போலீசார் வேலைக்கார பெண் அம்பிகாவின் செல்போன் சிக்னலையும் கண்காணித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கேமராவில் ஒரு காரில் வேலைக்காரப் பெண் அம்பிகா ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் அழைப்பு வந்த நம்பரின் சிக்னலை வைத்து கோவளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து பேசப்படுவது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு அன்விகா மீட்கப்பட்டார். மேலும் அம்பிகா மற்றும் முகமது கலிஃபுல்லா கான் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #Kidnapped #60 lakhs
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story