பிரசவத்திற்காக ஆம்புலன்சில் சென்ற நிறைமாத கர்ப்பிணி.! திடீரென ஏற்பட்ட விபத்து.! கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி. 23 வயதே ஆன நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலட்சுமியை மருத்துவனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸில் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில், ஏரிக்கரை சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர் பிரசவத்திற்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.