×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொங்கல் பரிசு 4 முழ வேட்டி, ஜரிகை சேலை, பொங்கல் பணம் ரூ 3,000 கிடைக்குமா? தவெக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு...!!!

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 முழ வேட்டி, ஜரிகை சேலை வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்துள்ளார். ரொக்கத் தொகை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு 4 முழ வேட்டி மற்றும் ஜரிகையுடன் கூடிய சேலை வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளும் முன்கூட்டியே தொடங்கியுள்ளன. அதேநேரம், பொங்கல் பரிசுடன் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

4 முழ வேட்டி, ஜரிகை சேலை வழங்க முடிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதன்படி, 4 முழ வேட்டி மற்றும் ஜரிகையுடன் கூடிய சேலை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.300 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த குட் நியூஷ்!!!

ரொக்கப் பணம் வழங்கப்படுமா?

கடந்த ஆண்டுகளில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதுபோன்ற அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அரசின் அடுத்த அறிவிப்பை எதிர்பார்க்கும் மக்கள்

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பொங்கல் பரிசு பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரொக்கத் தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கையையும் அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த ரூ.3,000 ரொக்கப் பரிசு அறிவிப்பு வெளியாகுமா என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.

 

இதையும் படிங்க: BREAKING : சற்று முன்... இன்ப அதிர்ச்சி.! ஒரே மாதத்தில்2-வது முறை... பால் விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஷ் சொன்ன முதல்வர் விஜய்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#2027 Pongal Gift #பொங்கல் பரிசு #விஜய் பாலாஜி #ரூ.3000 Cash #Tamil Nadu Pongal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story