இந்தா சிறுநீரை குடி..! பாத்திரத்தில் சிறுநீரை கொடுத்து குடிக்க சொன்ன பெண்கள்..! மனமுடைந்த இளைஞர் தற்கொலை..!
19 years old boy commit suicide who forced to drink urine
மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சிறுநீர் குடிக்க சொல்லி கொடுமை படுத்தியதால், அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள சஜோர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விகாஸ் சர்மா (19). சம்பவத்தன்று விகாஸ் சர்மா குவளை ஒன்றை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் தண்ணீர் குழாயில் குடிப்பதற்காக தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அவர் தண்ணீர் பிடிக்கும்போது அருகில் கிடந்த பாத்திரம் மீது தண்ணீர் சிந்தியுள்ளது.
இதனை பார்த்த பாத்திரத்தின் உரிமையாளர்கள் மூன்று பேர் (2 பெண்கள்), விகாஸ் ஷர்மாவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கையில் இருந்த குவளையை வாங்கி அதில் சிறுநீரை நிரப்பி, விகாஸ் ஷர்மாவை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற விகாஸ் சர்மா, இந்த சம்பவத்தால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் விகாஸ் சர்மா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விகாஸ் சர்மா எழுதி வைத்த கடிதம் ஒன்றையும், அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ ஒன்றையும் கைப்பற்றிய நிலையில், தற்கொலைக்கு காரணமான மூவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.