×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!...

ஊட்டியில் 17-வது ரோஜா கண்காட்சி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!...

Advertisement

கோடை விழாயொட்டி உதகை ரோஜா பூங்காவில் தொடங்கியுள்ள 17வது ரோஜா கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் (Ooty)  தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

உதகமண்டலத்தில் 17வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. ரோஜா கண்காட்சியை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 17வது உதகை ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 31,000 வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளை கவரும் விதமாக குழந்தைகளிடம் புகழ் பெற்ற கார்டூன் கதாபாத்திரங்களான் மோட்டு-பத்துலு வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்  மான், ப்யானோ மற்றும் பனி மனிதன் போன்ற வடிவங்களும், தமிழக அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த, மஞ்சப்பை போன்ற வடிவங்களும் சுமார் 50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் இதர மாவட்டங்களான நெல்லை, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்ட தோட்டக்கலைத் துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகளை குதுகலிக்கும் விதமாக தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் கண்காட்சியில் நடைபெறுகிறது. 17வது ரோஜா காட்சி இன்றும், நாளையும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ooty #Flower Show #Tourism #Nigiris #17th Show
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story