ரத்தத்துக்கு ரத்தம்? 17 வயது சிறுவன் சரமாரியாக வெட்டிக்கொலை.. நடுரோட்டில் துள்ளத்துடிக்க பிரிந்த உயிர்.!
Pudukkottai News: நீதிமன்றத்தில் ஆஜராக சொந்த ஊர் வந்தவர் கொலை செய்யப்பட்டார்.
17 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்பின்னணி கொண்டவர்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், பெருமநாடு பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகன் அன்புச்செல்வன் (வயது 17). இவர் ஐடிஐ படித்து இருக்கிறார். ஓசூரில் தங்கியிருந்தபடி வேலை பார்த்து வருகிறார். உள்ளூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், அன்புசெல்வனும் குற்றவாளியாக இருக்கிறார். இந்த சம்பவம் 2024ல் நடந்தது.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
டாஸ்மாக் கடைக்கு சென்றார்:
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் புதுக்கோட்டை சாலையில் இருக்கும் பேக்கரியில், இருசக்கர வாகனத்தை நிதி இருக்கிறார். அச்சமயம், அங்கு வந்த நண்பர் இவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிவிட்டு மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால், அன்புச்செல்வன் நடந்து சென்றுள்ளார்.
சரமாரியாக வெட்டிக்கொலை:
அச்சமயம் ஹோட்டல் ஒன்றின் முன்பு அவரின் இருசக்கர வாகனம் இருந்த நிலையில், அவர் இருசக்கர வாகனம் அருகே வந்ததும் அன்புசெல்வனை சுற்றிவளைத்த 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் தலை, கை-கால்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த அன்னவாசல் காவல்துறையினர் அன்புச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!