தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

# Breaking 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு.!

# Breaking 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு.!

17 IPS Officers Transfered Advertisement

தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பணி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரம்:

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்த குமார் தாம்பரம் சரக போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம். சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. யாக இருந்த சிபி சக்ரவர்த்தி தாம்பரம் சரக சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, சிஐடி, சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த பா.மூர்த்தி தாம்பரம் சரக தலைமை மற்றும் நிர்வாகத்துறை துணை கமிஷனராக இடமாற்றம். அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், ஆவடி சட்டம்-ஒழுங்கு காவல் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எம்.எம். அசோக்குமார், துணை போலீஸ் கமிஷனர், போக்குவரத்து மேற்கு, கிரேட்டர் சென்னல் போலீஸ், சென்னை, ஆவடி காவல் ஆணையரகம், போக்குவரத்து துணைக் காவல் ஆணையர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பி.பெருமாள், ஐபிஎஸ், காவல்துறை கண்காணிப்பாளர், அமலாக்கத்துறை, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர், ஆவடி போலீஸ் கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல்  மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 8 துணை ஆணையர்கள் நியமனம் செய்யபட்டுள்ளது. போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா 4 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

IPS Officers

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPS Officers #Transfered
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story