×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது இளம்பெண்.. கேரளாவில் திடுக் சம்பவம்.. உண்மை அம்பலமானது எப்படி தெரியுமா?

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சிறுமிக்கு 25 வயதுடைய இளம்பெண் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மீண்டும் அதே தவறை மேற்கொண்டுள்ளது அதிரவைத்துள்ளது.

தோழியின் மகளிடம் அத்துமீறல்:

Girl Raped Another Girl: கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், தலிப்பறம்பு பகுதியில் வசித்து வருபவர் சினேகா மெர்லின் (வயது 25). இவர் சில மாதங்களுக்கு முன்னதாக தனது தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இரவில் தங்கியிருந்த நிலையில், உறங்கிக்கொண்டு இருந்த தோழியின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

விழிப்புணர்வால் அம்பலமான உண்மை:

மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டிய நிலையில், பயந்துபோன சிறுமியும் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியின் பள்ளியில் குழந்தைகள் நலத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நிலையில், அப்போது சினேகாவின் செயல்பாடுகள் குறித்து சிறுமி கூறி இருக்கிறார்.

அதிரடி கைது:

இதனையடுத்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மேல்பறம்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் சினேகா மெர்லினை கைது செய்தனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெர்லின் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
 

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சாக்லேட் கொடுப்பதாக நடந்த கொடுமை.. அலறி ஓடிவந்து கதறிய சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #சிறுமி பலாத்காரம் #பெண் கைது #திருவனந்தபுரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story