×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூத்துக்குடியில் நாளை முதல் 144 தடை! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

144 in thuthukudi

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில் ஜனவரி 10-ஆம் தேதியன்று பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் நாளை முதல் ஜனவரி 11 ஆம் தேதி காலை 6.00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

பசுபதி பாண்டியனின் நினைவு தின விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சி மற்றும் சமுதாய கொடிகளைக் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் மேற்படி விழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், விழாவில் அன்னதானம் வழங்குவதற்கும்,144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அனுமதியின்றி எந்த ஏற்படும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#144 #john pandian
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story