தாய் தந்தை முடிவால் பறிபோன 14 வயது சிறுமியின் உயிர்.!
தாய் தந்தை முடிவால் பறிபோன 14 வயது சிறுமியின் உயிர்.!
புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், மதினா என்ற 14 வயது மகளும் உள்ளனர். மூர்த்தியின் மகள் மதினா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மதினாவின் பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
சிறுமி மதினா அவரது சித்தி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். மதினா, தாய் தந்தை பிரிந்து தனித்தனியே வாழ்வது குறித்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். மேலும் பள்ளி சென்று வந்த போதிலும் தாய் தந்தை ஒன்றாக இல்லை என்பதை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இதனால் மதினா தற்கொலை செய்து கொள்ள பல முறை முயற்சித்துள்ளார். அப்பொழுதெல்லாம் அவரது சித்தி சித்தப்பா மதினாவை தடுத்து நிறுத்தி சமாதானம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மதினாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தாய் தந்தை பிரிவினை ஏற்க முடியாத சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.