×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 வயதில் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி! குழந்தை பிறந்து 4 மாதத்தில் நடந்த விபரீதம்?

14 years old girl gave birth to male baby

Advertisement

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில் திருப்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பூரில் உள்ள விஜயா நகர் என்னும் பகுதியில் வெளிமாநிலத்தை சேர்ந்த சிலர் வேலைக்காக இங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு தங்கியிருந்த வட மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கும், வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதில், அந்த இளைஞர் அந்த சிறுமையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதில் அந்த சிறுமி 14 வயதில்லையே கற்பமாகியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, தலைமறைவாகியுள்ள அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையில் அந்த சிறுமிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது.

குழந்தையை சிறுமியின் உறவினர்கள் கவனமுடன் பார்த்துவந்த நிலையில் நேற்று அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தை இறந்ததிற்கான கரணம் தற்போது வரை தெரியவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story